சீனாவை மிரட்டும் புதிய சுவாச நோய்த்தொற்று…

சீனாவில் பரவும் புதிய நோய்த் தொற்றின் காரணத்தினால் அனைத்து நாடுகளும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சீனாவில் பரவி வரும் ‘HN2’ பறவைக் காய்ச்சல் மற்றும் வடக்கு சீனாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசப் பிரச்சினையைக் கருத்தில்கொண்டு சுகாதார தயார் நிலையை ஆய்வு செய்ய ஐநா அனைத்து நாடுகளையும் அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுவாசப் பிரச்சினைகளையும் பலர் எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்தப் புதிய நோய் பாதிப்புகள் குறித்து சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டது.

அதற்கு, ‘சுவாச நோய்த்தொற்று அதிகரிப்புக்கும் காய்ச்சலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்கு புதிய வைரஸ் எதுவும் காரணமில்லை. ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்கள்தான் அதிகரித்துள்ளன’ என்று சீனா விளக்கமளித்தது.

இந்த நிலையில், இந்த புதிய நோய் தொற்று குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தலில், ‘சீனாவில் ‘H9N2’ பறவைக் காய்ச்சல் பரவல் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் சுவாசப் பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பதைக் கருத்தில்கொண்டு, கொரோனா பெருந்தொற்றுக்காக பகிரப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த அனைத்து நாடுகளும் அறிவுறுத்தப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் பரவும் நோய்த்தொற்றின் போக்கு குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here