நிரந்தர நிவாரண மையங்கள் அமைப்பதற்கு ஒன்பது இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன -பிரதமர் துறை அமைச்சர்

கோலாலம்பூர்:

நிரந்தர பேரிடர் நிவாரண மையங்களை அமைப்பதற்காக நாடு முழுவதும் ஒன்பது இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள் மற்றும் சிறப்புப் பணிகள்) டத்தோ ஆர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.

குறித்த இடங்கள் அந்தந்த மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

மேலும் முன்னோடி திட்டத்திற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் ரிங்கிட் 45 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறிய ஆர்மிசான், பொதுப்பணித்துறை இதை விரைந்து செயல்படுத்தும் என்றும் கூறினார்.

“அடுத்த ஆண்டு தொடங்கும்வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். என்று நிவாரண மையங்களுக்கான வடிவமைப்பு மற்றும் ஏனைய விஷயங்களை பொதுப்பணித் துறை ஏற்கனவே தயாரித்து வருகிறது, ”என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னர் அறிவித்த நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் பற்றிய விவரங்கள் குறித்து டத்தோ சித்தி ஜைலா முகமட் யூசோஃப்பின் (PN-Rantau Panjang) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here