மூன்று வயது குழந்தை மலேசியா சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்தது

கோலாலம்பூர்:

இந்த இளம் வாகன ஆர்வலரின் அசாத்தியமான திறமையும், கார்கள் மீதான பேரார் வமும், இந்தக் குழந்தையின் எதிர்காலத்தை கணிப்பதாக பல விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பேசப்பட்டன.

வீக்காஷுக்கு ஏன் கார் லோகோக்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு இருந்தது என்று கேட்ட போது, ​​அவருடைய தாயார் இது தனித்துவமான மற்றும் மாறுபட்ட வடிவமைப்புகளை மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வமே காரணம் என்று விளக்கினார்.

கார்கள் மீதான அவரது புரிதல் மற்றும் ஒவ்வொரு லோகோவிற்கும் பின்னால் உள்ள முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதில் அவர் இந்த வயதிலேயே ஆழமாக ஆராயம் பழக்கம் கொண்டவராக இருக்கிறார், அதை நானும் ஊக்குவித்தேன் என்கிறார்.

வீக்காஷின் சாதனை ஒரு நிமிடத்திற்குள் 40 லோகோக்களை அடையாளம் கண்டு கொள்வதாக இருந்தாலும் மொத்தம் 250 வெவ்வேறு கார் லோகோக்களை அடை யாளம் காணும் திறன் அவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கற்றல் மற்றும் புதிய விஷயங்களை ஆராய்வதில் எப்பொழுதும் முனைப்புடன் இருக் கும் ஒரு குழந்தை வீகாஷ். வீகாஷின் வருங்கால கனவுகள் மற்றும் எண்ணங்களை எங்களை இப்போதைக்கு கணிக்கமுடியவில்லை, இருப்பினும் அவரது நினைவாற்றல், சிந்தனை, ஆட்டோமொபைல்களில் ஆராயும் ஆர்வம் என்பவற்றை கவனிக்கும்போது அவருக்கு ஒரு மிகச்சிறந்த எதிர்காலம் உருவாகும் என்பதில் ஐயமில்லை என் கின்றனர் பெற்றோர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here