ஜோகூர் சோதனைச் சாவடிகளில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தப் பரிந்துரை- மந்திரி பெசார்

இஸ்கந்தர் புத்ரி:

ஜோகூரில் உள்ள சுங்க, குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் தனிமைப்படுத்தலுக்கான வளாகத்திலும் கடப்பிதழுக்குப் பதிலாக QR குறியீட்டைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென, மாநில மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி பரிந்துரைத்துள்ளார்.

உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் 2024ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் அத்தகைய நடைமுறையை அமல்படுத்தவிருப்பதை அவர் சுட்டினார்.

ஜோகூரிலும் அதேபோல் செயல்படுத்தலாம் என்றும், இதன்மூலம் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் அந்த நடைமுறை உதவும் என்றும் கூறினார்.

“சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அண்மையில் 10வது சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பில் எடுத்த முடிவை ஜோகூர் மாநில அரசாங்கம் வரவேற்கிறது.

“அதேவேளையில், சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே ஊழியர்களும் பொருள்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களும் சுமுகமாகக் கடந்துசெல்வதை உறுதிப்படுத்தும் விதமாக, மலேசியாவின் மத்திய அரசாங்கத்திடமும் சிங்கப்பூர் அரசாங்கத்திடமும் மூன்று பரிந்துரைகளை முன்வைக்க ஜோகூர் மாநில அரசாங்கம் விரும்புகிறது.

முதலாவதாக, “ஒன்றுக்கு மேற்பட்ட முறை செல்வதற்கான விசா, சிறப்பு அனுமதி அட்டைகளை வழங்குதல், குடி நுழைவு, சுங்கத்துறைகளில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுவதை உறுதிசெய்தல், சுங்க, குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் தனிமைப்படுத்தலுக்கான வளாகத்திலும் QR குறியீட்டை அறிமுகம் செய்வது ஆகியவை குறித்து மலேசியாவின் மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யவேண்டும் ,” என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here