முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அபாங் அபு பக்கர் அபாங் முஸ்தபா காலமானார்

கூச்சிங்:

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ அபாங் அபு பக்கர் அபாங் முஸ்தபா இன்று திங்கட்கிழமை (டிச. 4) காலமானார்.

சரவாக்கைச் சேர்ந்த இவர், கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய கழகத்தில் (IJN) காலை 9.55 மணிக்கு காலமானார்.

82 வயதான அபாங் அபு பக்கர், 1999 முதல் 2003 வரை நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.

அதற்கு முன்னர், அவர் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் (1987 முதல் 1990 வரை) பிரதமர் துறை அமைச்சராகவும் (1990 முதல் 1999 வரை) நியமிக்கப்பட்டார்.

அபாங் அபு பக்கர் 1982 முதல் 1990 வரை பாலோ எம்பியாகவும், 1990 முதல் 1999 வரை கோலா ராஜாங் எம்பியாகவும் இருந்தார். இவைதவிர அவர் 1973 முதல் 1981 வரை கூச்சிங் பாராட் மற்றும் சடோக்கின் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், 1976 முதல் 1981 வரை சரவாக் சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here