மன அழுத்தத்தை தீர்க்கும் முத்து நகைகள்

உலகம் போற்றும் தமிழக முத்துக்கள்

சூரியனுக்கு மாணிக்கம் என்பதும் சந்திரனுக்கு முத்து ஆகும். தமிழ்நாட்டு முத்துக் களுக்கு உலக அளவில் புகழ் உண்டு. பாண்டிய நாட்டின் தலைநகரான கொற்கை நகரம் முத்து நகரம் என்று அழைக்கப்பட்டது. அதனால்தான் தூத்துக்குடிக்கு செல்லும் ரயில் வண்டியின் பெயர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் எனப்படுகிறது.

முத்து மன நோய்க்கு மருந்து

முத்து சந்திரனுக்குரிய ரத்தினமாக இருப்பதனால், லட்சுமி கடாட்சம் அருளக்கூடியது. மன நோய்க்குத் தீர்வளிக்க கூடியது. திருமண வாழ்வு சிறக்க உதவுவது. முத்து அணிபவர் அன்பு, ஈகை, இரக்கம், கருணை உள்ளவராக இருப்பார்கள்.

ஸ்ரீராமனுக்கும் பெண்ணால் தொல்லை

மனிதர்களில் உத்தமனாக விளங்கிய ஸ்ரீராமனின் ராசி கடக ராசி ஆகும். அதாவது, சந்திரனுக்கு உரிய ராசி. கடக ராசியில் சந்திரன் ஆட்சி செய்கிறார். ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் பெறுகிறார். இது சுக்கிரன் ஆட்சி செய்யும் ராசி. சந்திரனும் சுக்கிரனும் நண்பர்கள். இவர்கள் ஜாதகத்தில் வலுவாக இல்லை என்றால் பெண்களால் மனக் கவலை, அவமானம், தற்கொலை எண்ணம் தோன்றும். கடக ராசியில் பிறந்த ராமருக்கும் பெண்களால் தொல்லை. ரிஷப ராசிக்காரர்களும் அவர்கள் ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெற முத்து வாங்கி அணியலாம். பெண்களால் தொல்லை வராது. இவர்கள் முத்து நகை அணிவது மன நிம்மதியைத் தரும்.

காதலால் கவலையா?

சந்திரனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் ஆகின்றபடியால், சுக்கிரன் ஆட்சி செய்யும் அல்லது சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் ஆகிறார். சுக்கிரன் எதிர் பாலினக் கவர்ச்சிக்குரிய கிரகம். ஆரம்பத்தில் குருவிடம் சந்திரன் மாணவராக இருந்ததனால் சந்திரன் ராசியில் குரு உச்சம் பெறுகிறார். குரு போக சுகத்திற்குரிய கிரகம். கடக ராசியில் குரு உச்சம், ரிஷப ராசியில் சுக்கிரன் உச்சம், குருவும் சுக்கிரனும் சந்திரனுக்கு நட்பு பகை என்று இல்லாமல் சமமாக விளங்கு கின்றனர்.

காதல், போகம், சந்தோஷம் ஆகிய மூன்றும் சுக்கிரன், குரு, சந்திரன் சேர்க்கை யில்தான் கிடைக்கும். இதற்கு முத்து நகை உதவும். முத்தின் முழு சக்தி கிடைக்க முத்து மோதிரம், முத்துமாலை, முத்துப் பதக்கம், முத்துத் தோடு தொங்கட்டான், முத்து மூக்குத்தி போன்றவற்றைத் தனியாக அணிவதே சிறப்பு. நாம் அணிகின்ற முத்து நம்முடைய விரலை அல்லது உடம்பை, கழுத்தை, காதை, முக்கைத் தொடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் முத்தின் முழு சக்தியும் உடம்புக்குள் புகும்.

முத்தும் சந்திரகாந்தமும்

ஜூன் மாதத்திற்குரிய ரத்தினமாக முத்து சந்திரகாந்தக் கல், அலெக்ஸாண்டரைட் என்ற வெண்மை நிற கல்லும் விளங்குகின்றது. பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு கல் என்று வகைப்படுத்தி இருந்தாலும்கூட ஓரிரு மாதங்களுக்கு இரண்டு மூன்று நவரத் தினம் அல்லது உபரத்தினங்களை சிறப்பானதாக வரையறுத்துள்ளனர். ஜூன் மாதத் தில் பிறந்தவர்கள் முத்து அல்லது சந்திரகாந்தக் கல்லை அணியலாம். சந்திரகாந்தக் கல் என்பது வெண்மையான ஒளி ஊடுருவக் கூடிய ஒரு கல். பார்க்க பளிங்கு கல் போலத் தோன்றும். ஆனால் சந்திரனின் ஒளியில் அது குளிர்ச்சியை உள்வாங்கி உடம்புக்கு குளிர்ச்சி ஊட்டும்.

உலகின் சிறந்த முத்து

உலகின் சிறந்த முத்து எங்கே கிடைக்கின்றது? தமிழ்நாட்டில் கிடைக் கின்றது. தமிழ்நாட்டில் உள்ள கொற்கை நகரில் கிடைத்த முத்து உலகின் சிறந்த முத்தாக மதிக்கப்பட்டது. சங்க காலத்தில் நான்கு பெரிய துறைமுகங்கள் இருந்தன. அவை காவிரிப்பூம் பட்டினம், எயிற் பட்டினம், தொண்டி முசிறி ஆகியன. கொற்கை துறைமுகம் முத்து குளிப்பதற்காகவே சிறப்பு பெற்ற துறைமுகம் ஆகும். எனவேதான் பாரதியார்;

முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம் அருள் வேண்டுவது மேற்கடலிலே
– என்றார்.

சிதறிய முத்துக்கள்

உலகெங்கும் இருந்து வணிகர்கள் கொற்கைக்கு வந்து சிறந்த முத்துக்களை வாங்கிச் சென்றனர். கடற்கரையில் சிதறி கிடந்த முத்துக்கள் கப்பல்களில் வந்திறங்கிய கு திரைகளின் குளம்புகளுக்குள் சிக்கிக் கொண்டனதாக சங்க இலக்கியம் கூறுகின்றது. கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தாங்கள் குடிக்கும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தந்தனர்.

ஆந்திராவின் யானைப்படை

கொற்கையில் கிடைத்த முத்துக்களைப் பற்றி வரலாற்றாசிரியர் பெரிப்ளூஸ் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த முத்துக்களைப் பாதுகாக்க மறப்போர் பாண்டியன் என்னும் சங்க காலத்து மன்னன் இன்றைக்கு ஆந்திராவில் உள்ள திருப்பதி என்னும் திருவேங்கட மலையிலிருந்து யானைகளைக் கொண்டு வந்து பயன்படுத்தினான்.

ஏகவடம் என்னும் முத்து மாலை

ஆறுகள் கடலில் கலக்கும் இடத்தில் குடா பகுதியில் முத்து பூச்சிகள் நிறைய காணப் படும். மேற்கடலில் கொற்கை முத்துக்கள் நிறைய விளைந்தன. மன்னர்கள் அக் காலத்தில் தனி முத்துக்களால் ஆகிய முத்துமாலை அணிந்தனர். அதனை ஏக வடம் என்று அழைத்தனர்.

முத்தின் பலன்

மன நோய் மறைய, மன அழுத்தம் குறைய, மனக் கவலை தீர, பெண்களால் துன்பங் கள் வராமல் இருக்க, திருமண வாழ்வில் மன அமைதி கிடைக்க முத்துக்கள் வாங்கி அணிவது நல்லது.

எப்படி? எங்கு அணியவேண்டும்?

முத்துக்களை வெள்ளி அல்லது தங்கத்தில் பதித்து சுண்டு விரலில் அணிய வேண்டும் என்று ரத்னா சாஸ்திரம் கூறுகின்றது. சுண்டு விரல்தான் முத்து நகை அணிவதற்குரிய விரல். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீன ராசிக்காரர்களும்கூட அவர்கள் ஜாத கத்தில் சந்திரன் வலிமையாக இருந்தால் முத்து நகை அணியலாம்.

முத்துவுடன் சேர்த்து வைரம் கோமேதகம் வைடூரியம் நீலக்கல் போன்றவற்றை அணி யவே கூடாது. ஆண்கள் தங்கள் வலது கையில் மட்டுமே முத்து மோதிரங்களை அணிய வேண்டும். பெண்கள் இரண்டு கையின் சுண்டு விரலில் முத்து மோதிரங்களை அணி யலாம். முத்துக்களை சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமை அன்று பகலில் வாங்கு வதும், அணிவதும் மிகவும் சிறப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here