குளுவாங்கில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது

குளுவாங்:

ண்டார் குளுவாங்கில் உள்ள ஜாலான் Hj மனான் சாலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று (ஜனவரி 21) அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த நடவடிக்கை நடத்தப்பட்டதாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ கூறினார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 24 முதல் 48 வயதுடைய மூன்று ஆண்களை நாங்கள் கைது செய்யதுள்ளோம். சந்தேக நபர்களில் ஒருவருக்கு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட முந்தைய வழக்கு உள்ளது,” என்று அவர் இன்று திங்கள்கிழமை (ஜனவரி 22) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேகநபர்களின் சிறுநீர் பரிசோதனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் போதைப்பொருள் பாவித்ததாக எந்த சான்றுகளும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 (திருத்தம் 2020) பிரிவு 45A(1)ன் கீழ் மது அல்லது போதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM30,000 வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை வழங்குகிறது, அத்தோடு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதியற்றவராக ஆக்க முடியும் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here