கணக்காளரின் சடலம் செராஸில் கண்டெடுக்கப்பட்டது: போலீசார் கொலை என சந்தேகிக்கின்றனர்

ஜாலான் குவாரி, கம்போங்  பாருவில் கணக்காளர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். திங்கள்கிழமை (டிசம்பர் 11) காலை 6 மணியளவில் 28 வயது இளைஞனின் நிர்வாண உடல் வழிப்போக்கர்களால் முகம் குப்புறக் கண்டெடுக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீன் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் உடலில் காயங்கள் காணப்பட்டன. செவ்வாய்கிழமை (டிசம்பர் 12) சென்சிலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை, ஆனால் குடும்பத்தினர் அவரை பின்னர் அடையாளம் கண்டுகொண்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் செராஸ் காவல்துறையின் ஹாட்லைன் 03-9284 5050/5051, கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2115 9999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here