லாபுவான்:
இங்கு தஞ்சோங் குபோங் கடற்பரப்பில் இருந்து வடமேற்கே 54 கிமீ தொலைவில் குண்டுவீசி மீன் பிடிக்கு ம் நடவடிக்கைகலில் ஈடுபட்ட ஒரு மலேசியர் மற்றும் ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மீன்வளத் துறையுடன் இணைந்து லாபுவான் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA) கைது செய்தது.
சரியான உரிமம் இல்லாத கப்பல்களை குறிவைத்து நண்பகல் நேரத்தில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் சிறிய படகுடன் வந்தவர்களிடம் படகிற்கு செல்லுபடியாகும் உரிமம் எதுவும் வைத்திருக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார் MMEA Labuan இயக்குனர் கேப்டன் Izwanhadi Idros.
மேலும் விசாரணையில், கப்பலில் 300 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான மீன் களும், கூடுதலாக 300 கிலோ உலர் மீன் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
40 வயதான மலேசிய கேப்டன் மற்றும் 25 முதல் 61 வயதுடைய வெளிநாட்டவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.




















