பேராக்கில் 33 மனங்கவரும் சுற்றுலா இடங்கள்!

2024 பேராக் வருகை ஆண்டு என மாநில அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மாநில சுற்றுலாத்துறை பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. சுற்றுப்பயணிகளைக் கவரக்கூடிய 33 சுற்றுலா இடங்களையும் அடையாளம் காட்டி இருக்கிறது.

பள்ளி இறுதி ஆண்டு விடுமுறை தொடங்கவிருக்கும் இவ்வேளையில் மாணவர்களுக்கும் கணிசமான கழிவுகளைத் தருவதற்கு TOURISM MALAYSIA எனும் மலேசிய சுற்றுலாத்துறை ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. 2024 பேராக் வருகை ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை விளம்பரப்படுத்துவதிலும் மாநில அரசாங்கம் தீவிரமாக உள்ளது.

பேராக் மாநிலம் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளுக்கும் பிரபலமானது. சுவையான உணவுகளுக்கு பஞ்சமில்லை. இரவு வேளைகளிலும் தேடிச்செல்லும் உணவு தாராளமாகக் கிடைப்பதற்குரிய ஓர் இடமாக பேராக் மாநிலம் விளங்குகிறது.

கண்கவர் சுற்றுலா இடங்களில் பேராக் குகைக்கோவிலும் ஒன்று குனோங்.
தாசேக்கில் ஒரு சுண்ணாம்பு மலைக்குகையில் உள்ள பௌத்த ஆலயம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. அதன் கட்டடப் பணிகள், வடிவமைப்புகள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன.

40 அடி உயரத்திலான தங்க நிறத்திலான புத்தர் சிலையை 4 தேவதைகள் காப்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

லோஸ்ட் வோர்ல்டு ஆப் தம்புன்

ஈப்போ சன்வே சிட்டியில் இந்த லோஸ்ட் வோர்ல்டு தம்புன் தீம் பார்க் அமைந்திருக்கிறது. இயற்கை சுடுநீர் குளங்களுக்கும் வனப்பகுதிக்கும் பெயர் பெற்றது. கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகள் பழைமைமிக்க சுண்ணாம்புக்கல் மலைப்பகுதிகள் உள்ளன. சுற்றுப்பயணிகளைக் கவர்வதற்கு 7 கேளிக்கை பூங்காக்களும் உள்ளன.

ஃபென்டசி ஹவுஸ் டிரீக் ஆர்ட்

ஈப்போ ஜாலான் மார்க்கெட் பகுதியில் ஃபென்டசி ஹவுஸ் டிரீக் ஆர்ட் உள்ளது. 3டி எனப்படும் முப்பரிமாண ஓவிய கேலரி. இந்தக் கேலரியில் 26 சுவர் ஓவியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மாறுபட்ட கருப்பொருளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. சர்க்கஸ் மேலும் தலைகீழ் ஓவியங்களும் இங்கு உள்ளன. 3டி முப்பரிமாண சாகசங்களை இங்கு காணலாம்.

டாக்டர் சீனிவாசகம் பார்க்

ஈப்போவுக்கு வருகை புரிபவர்கள் மாநகரின் மையப் பகுதியில் உள்ள டாக்டர் சீனிவாசகம் பூங்காவைப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள். ஈப்போ மாநகரில் மக்களுக்கான ஒரு பிரபலமான மனமகிழ் மையமாக இது திகழ்கிறது.

கெல்லி காஸல்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு லட்சியவாதி தோட்டக்காரர் வில்லியம் கெல்லி ஸ்மித் வடிவமைத்து நிர்மாணித்ததுதான் இந்தக் கெல்லி காஸல் எனும் பிரமாண்ட கோட்டை. பத்துகாஜாவில் இது இடம்பெற்றுள்ளது.

ஆர்ட் ஆஃப் ஓல்டு டவுன்

கெர்பாங் மாலாம் எனும் இரவுச் சந்தை, பேர்ச் நினைவு மணிக்கூண்டு கோபுரம், தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரம், தஞ்சோங் துவாலாங் ஈய லம்பம், ஈப்போ ரயில் நிலையம், ஓராங் ஊத்தான் தீவு, மூவி எனிமேஷன் பார்க், கம்பார் ஆற்றில் படகு ஓட்டம், ஈப்போ மியூசியம், கிளேடாங் மலை ஏறுதல், சுல்தான் அப்துல் அஸிஸ், மனமகிழ் பூங்கா போன்றவை சுற்றுப்பயணிகளைக் கவரும் மையங்களாகத் திகழ்கின்றன.

ஒருமுறை வருகை புரிந்தால் மீண்டும் மீண்டும் வருகை புரியத் தூண்டும் இந்தச் சுற்றுலாத்தலங்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here