பாஜகவுக்கு விஜய் ஆதரவு? மிரண்ட “திராவிட கட்சிகள்”

சென்னை:

சமீப காலமாகவே, நடிகர் விஜய்யின் செயல்பாடுகளிலும், பேச்சுக்களிலும், வழக்கத் துக்கு மாறான அரசியல் வாடை தெறித்து விழுந்து கொண்டிருக்கிறது.  அந்தவகை யில், சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று உரக்க குரலெழுப்பிய அம்பேத்கரும், பெரியாரும், காமராஜரும் மாறி மாறி விஜய்யின் பேச்சில் நினைவுகூரப்பட்டு வருகிறார்கள்.

நடிகர் விஜய்யின் அரசியல் இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில், பல்வேறு தரப் பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இதை திராவிட கட்சிகளும் உற்று கவனித்தபடியே வருகின்றன.

பெரியாரை முன்னிலைப்படுத்தியிருந்த விஜய், மறைந்த முதல்வர்கள் அண்ணாவின் பெயரையோ, கலைஞர் பெயரையோ சொல்லவில்லை. மாறாக, பெரியார், அம் பேத்கர், காமராஜர் பெயரை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால், இந்துத்துவாவுக்கு எதிரான அரசியலை கையில் எடுக்க போகிறாரா? என்ற சந்தேகத்தையும் அதிகமாகவே கிளப்பிவிட்டுள்ளார்.

அதேசமயம், தமிழ்த் தேசிய சிந்தனைகளிலும் அவரது ஈடுபாடு இருப்பதாக தெரிய வில்லை.அப்படியானால், விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை மட்டுமே விஜய் முன்னெடுக்கக்கூடும் என்றும் அனுமானங்கள் சொல்கின்றன.. சுருக்கமாக சொல்லப் போனால், அது மாதிரியும் இல்லாமல், இது மாதிரியும் இல்லாமல், ஒருபுது மாதி ரியான அரசியலாக இருக்கும் என்றே தெரிகிறது.

அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலைவிட, தமிழக சட்டப்பேரவை தேர்தலை மையப்படுத் தியே விஜய்யின் அரசியல் இருக்கலாம் என்றும், வேண்டுமானால், இந்த எம்பி தேர்தலை ‘வெள்ளோட்டமாக’ விஜய்யின் மக்கள் இயக்கம் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அனுமானங்கள் கூறுகின்றன.

கடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பஞ் சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றிருந்தது. அதாவது, நாம் தமிழர், தேமுதிக போன்ற சீனியர் அரசியல் கட்சி களைவிட, ஜூனியர் அமைப்பான ‘விஜய் மக்கள் இயக்கம்” சிறப்பாக செயல்பட்டு மக் களின் கவனத்தை திருப்பியிருந்தது. பல தலைவர்கள் பேசி பேசி வாங்கிய வாக்குக ளைவிட, பேசாமலேயே சாதித்து காட்டியிருந்தார் விஜய். இப்போதுகூட தேர்தல் குறித்து, விஜய், வாய் திறக்கவேயில்லை. கட்சி குறித்தோ, அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ எதுவுமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதிகாரப்பூர்வமான தகவலையும் தரவில்லை.. ஆனாலும், தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here