பெட்டாலிங் ஜெயா:
ஆட்டிஸம் குழந்தையான ஜெய்ன் ரய்யான் அப்துல் மதினின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள ஓடையில் இன்று போலீசார் காலுறையை (shocks) கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த காலுறையை பரிசோதனைக்கு ஆய்வுக்காக அனுப்பி, அது ஜெய்ன் ரய்யானுடையதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்றார் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான்.
எங்களுக்கு ஒரு காலுறை மட்டுமே கிடைத்தது, ஆனால் அது குழந்தைக்கு சொந்தமானதா இல்லையா என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும், என்றும் அவர் கூறினார்.
நேற்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் உதவியை நாடி, ஓடையில் உள்ள நீரை வெளியேற்ற காவல் துறையினர் அவர்களின் உதவியை நாடினர்.
முன்னதாகஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயதுக் குழந்தை டிசம்பர் 5 ஆம் தேதி டமன்சாரா டாமாயில் காணாமல் போனது, மறுநாள் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு ஓடை அருகே இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.