ரூ.1000 கோடியை நெருங்கும் வசூல்… 16 நாளில் சாதனை படைத்த ‘அனிமல்’ திரைப்படம்

 பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியான 9 நாட்களில் ரூ.660 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த படம் 16 நாட்களில் ரூ.817.36 கோடி வசூலித்துள்ளது. வார இறுதி நாளான இன்று இந்த படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here