நாடாளுமன்ற தேர்தல்: இன்று விஜய்ணா செய்வார்னு எதிர்பார்த்ததை விஷால் செஞ்சுட்டாரே

நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாநகரில் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த விஷால் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். மனிதர் ஜீன்ஸ், டி சர்ட்டில் கூலாக சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் காலையில் இருந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஜித் குமார், ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் வாக்குப்பதிவு துவங்கியதும் வாக்களித்துவிட்டார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற அவர் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ காரில் வந்து வாக்களித்தார். விஜய்க்கு பதில் விஷால் சைக்கிளில் வந்தார்.

அண்ணாநகரில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் ஜாலியாக வந்து வாக்களித்தார் விஷால். அவர் கருப்பு நிற டி சர்ட்டும், தொப்பியும் அணிந்து வந்தார். ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ரத்னம் பட நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் தைரியமாக பேசி வருகிறார் விஷால்.

2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் சைக்கிளில் வந்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர் சைக்கிளில் வந்ததை பார்த்த விஜய் ரசிகர்களோ, அதே டெய்லர், அதே வாடகை. விஜய் அண்ணா வழியில் விஷால் என்கிறார்கள்.

இதற்கிடையே விஜய் கையில் பிளாஸ்திரி இருந்தது. அவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இல்லை என்றால் அண்ணனும் கெத்தாக சைக்கிளில் வந்திருப்பார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். வாக்களிக்க வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ரசிகர்கள் வெள்ளத்தில் தான் வந்து வாக்களித்துவிட்டுச் சென்றார்.

முன்னதாக 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார் விஜய். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் வந்தார் என கூறப்பட்டது. ஆனால் வீட்டிற்கு அருகில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு கார் எதற்கு என சைக்கிளில் வந்ததாக விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

வீட்டிற்கு பின்னால் இருக்கும் தெருவில் வாக்குச்சாவடி உள்ளது. அது சின்ன தெரு. அதனால் காரில் சென்று வருவது கடினமாக இருக்கும். அதனால் தான் விஜய் சைக்கிளில் சென்றார். மற்றபடி எந்த காரணமும் இல்லை என்று விளக்கம் அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here