மூன்று வாரங்களாக தேங்கி நிற்கும் மழை நீர்; ரந்தாவ் பஞ்சாங் மக்கள் அவலம்

பாசீர் மாஸ்:

கடந்த மூன்று வாரங்களாக தேங்கி நிற்கும் வெள்ளநீரை அப்புறப்படுத்தி, அவற்றை சீர் செய்ய வேண்டி ரந்தாவ் பஞ்சாங்கைச் சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் அவலநிலையைக் கவனிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சுங்கை கோலோக் PLSB திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட வெள்ளத் தணிப்பு கட்டுமானத்தின் விளைவாக இந்தப் பிரச்சனை ஏற்பட்டதாக ரந்தாவ் பஞ்சாங் வெள்ள நடவடிக்கைக் குழு உறுப்பினர் முகமட் அரிஃபின் இஸ்மாயில் தெரிவித்தார்.

கம்போங் லுபோக் ஜாங்கைச் சுற்றியுள்ள பல குடியிருப்புப் பகுதிகளைத் தவிர, கம்போங் டெர்சாங், கம்போங் பெந்தோங், பெரோல், கம்போங் குவால் டோடே, கம்போங் குசார், கம்போங் பாடாங் லிசின், கம்போங் லுவார் மற்றும் கம்போங் தாசெக் பகோங் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

“வழக்கமாக, இந்த அனைத்து குடியிருப்புகளிலும் வெள்ள நிலைமை சில நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும், ஆனால் வெள்ளத் தணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட ஒரு மாதமாக வெள்ள நீர் வடியாது தேங்கி நிற்கிறது.

“இவ்வளவு காலம் தற்காலிக நிவாரண மையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்ததால், இதனால் அவர்களுக்கு மன அழுத்தத்தம் ஏற்படுவதோடு, சில குடியிருப்பாளர்கள் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ரிங்கிட் வரை இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது,” என்று அவர் அமைதியான ஆர்ப்பாட்டத்தை நடத்திய பின்னர், இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here