கே. ஆர். மூர்த்தி
கூலிம், டிச. 21-
வட மாநிலத்தில் செயல்பட்டு வரும் மலேசியா மஹா சிலம்பம் குத்து வரிசை கழகத்தின் கண்காட்சி ஆலய திருவிழா ஒன்றில் நடத்தப்பட்டது.
மலேசியா மஹா சிலம்பம் குத்து வரிசை கழகத்தின் வட மாநில மாஸ்டர் பா. பிரகாஷ் தலைமையில் வட மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகளில் மஹா சிலம்பம் குத்து வரிசை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுங்கைபட்டாணியில் அமைந்துள்ள நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவை முன்னிட்டு மஹா சிலம்பம் குத்து வரிசை விளையாட்டு கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் கோலக்கெட்டிலை சேர்ந்த லுபோக் செகிந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கைபட்டாணியைச் சேர்ந்த மகா ஜோதி தமிழ்ப்பள்ளி, ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, லுனாஸ் பாயா பெசாரைச் சேர்ந்த கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் முழுமையான திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஆலயத்தின் திருவிழாவிற்கு வருகை தந்தவர்கள் பலர் இம்மாணவர்களின் திறமைகளை வெகுவாக பாராட்டி தங்களின் முழுமையான ஆதரவை வழங்கினர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் இக்கலையை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல பள்ளிகளில் இக்கலையை விரிவாக்கம் செய்ய பல நடவடிக்கைகளை இக்கழகம் மேற்கொண்டு வருவதாக மாஸ்டர் பா. பிரகாஷ் தெரிவித்தார்.









