மித்ரா ஆதரவில் எதிர்கால கபடி ஹீரோ போட்டி

 

 

 

எம். அன்பா

 

செமினி, டிச. 21-

கபடி விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் மித்ரா நிதியுதவியுடன்  செமினி கபடி கிளப் நடத்தும் எதிர்கால கபடி ஹீரோ போட்டியில் உலுலங்காட் மாவட்ட அளவிலான 7 முதல் 29 வயது வரையிலான 85 விளையாட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்று செமினி கபடி கிளப் தலைவர் பாலமுருகன் குணசேகரன் கூறினார். 2024ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதல் டிசம்பர்  24ஆம் தேதி வரை இந்தப் பயிற்சிகள் நடைபெறும்.

பாரம்பரியமிக்க கபடி விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 104 நாட்கள் ஒவ்வொரு சனிக்கிழமை,  ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் மாலை 6.00 மணி வரை அத்லோன் டிஃபுட்ங்ால், புரோகா, ஙெ்மினி எனும் இடத்தில் பயிற்சிகள் நடைபெற உள்ளது. கபடி விளையாட்டுத் துறையில் நன்கு தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்களின் வழிகாட்டலால் பெண்கள் விளையாட்டுகளுக்கு இரண்டு பயிற்றுநர்களும் ஆண்கள் விளையாட்டாளர்களுக்கு இரண்டு பயிற்றுநர்களும் இப்பயிற்சியைச் சிரத்தையுடன் வழி நடத்துகின்றனர்.

மாவட்டம், மாநிலம், தேசிய அளவில்  கபடி போட்டி விளையாட்டுக்கு இளைஞர்கள் பெரும் அளவில் பங்கேற்கவும் கபடி பயிற்சிகளுக்குத் தளம் ஒன்று தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேல் விவரங்களுக்கு செமினி கபடி கிளப் தலைவர் பாலமுருகனைத்  016-3387674 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here