இளைய தலைமுறை அறியாமையிலிருந்து விடுபடவேண்டும்- பிரதமர்

TANJUNG MALIM, 21 Dis -- Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim berucap pada Sesi Temu Anwar di Kampus Sultan Azlan Shah, Universiti Pendidikan Sultan Idris (UPSI), Tanjung Malim hari iniTurut hadir, Menteri Pendidikan Tinggi Datuk Seri Dr Zambry Abd Kadir dan Timbalan Menteri Belia dan Sukan Adam Adli Abd Halim.--fotoBERNAMA (2023) HAK CIPTA TERPELIHARA

தஞ்சோங் மாலிம்:

ற்போதைய இளைய தலைமுறையினர் அறிவின்மை அல்லது அறியாமை காரணமாக மற்றவர்களின் நம்பிக்கைகள் மற்றும் பார்வைகளால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார்.

சுருக்கமாக கூறினால் சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள், கிளிப்புகள் மூலம் இளைஞர்கள் எளிதில் வசப்படும் போக்கு கவலை அளிப்பதாவும், எனவே இளைய தலைமுறையினர் தங்களின் அறிவை பல்வேறு துறைகளிலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விவரித்தார்.

தேசியக் கொள்கை, பொருளாதாரம், கல்வி போன்றவற்றைப் பொறுத்தமட்டில் கூட, சமூக ஊடகப் பதிவில் காண்பவற்றைவைத்து சில நிமிடங்களில் அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.

“இது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது விரிவான கொள்கை அறிவு இல்லை,” என்று அவர் நேற்று யுனிவர்சிட்டி பெண்டிக்கான் சுல்தான் இட்ரிஸின் (UPSI) சுல்தான் அஸ்லான் ஷா வளாகத்தில் நடந்த தேசிய புத்தக விருதுகள் 2023க்கான தனது தொடக்க உரையின் போது அவர் இவ்வாறு கூறினார்.

பொருளாதாரம் அல்லது கொள்கைகள் போன்ற ஒரு யோசனை அல்லது பிரச்சினைகளை ஆழமாக ஆராயும் அறிவு தேவை என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here