நாகம்மா கோயில் இடமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம்: ஜலிஹா முஸ்தபா வலியுறுத்தல்

செந்தூலில் உள்ள நாகம்மா கோயில் இடமாற்றம் செய்வதை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா பொதுமக்களை வலியுறுத்தினார். YTL லேண்ட் & டெவலப்மென்ட் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ ஹமிதா பாக்கரின் தலைமையில் YTL உடன் ஒரு விவாதம் நடத்தப்பட்டதால், பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று டாக்டர் ஜாலிஹா உறுதியளித்தார்.

இன்றைய விவாதம் சாதகமாக இருந்தது, இந்தப் பிரச்சினை விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன். இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படுவதை உறுதி செய்வேன். மேலும் கூட்டரசு மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக இதை அரசியல் பிரச்சினையாக மாற்றாமல் அமைதியாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் க.சரஸ்வதி, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், கோலாலம்பூர் மாநகர மன்றத்தினர் மற்றும் மலேசிய இந்து சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here