மளிகை கடைகள் – மினி மார்க்கெட்டில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்குங்கள்- MAWAR கோரிக்கை

புத்ரா ஜெயா:

நாட்டில் உள்ள மளிகை கடைகள் மற்றும் மினி மார்க்கெட்டில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கும்படி மனிதவள அமைச்சர் சிவகுமாரை மலேசிய முஸ்லிம் மளிகை கடைகள் வியாபாரிகள் சங்கம் (MAWAR) கேட்டுக் கொண்டுள்ளது.

மளிகை கடைகளில் வேலை செய்வதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் வருவதில்லை.

இந்நிலையில் மளிகை கடைகள் மற்றும் மினி மார்க்கெட்டில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் தொடர்ந்து வியாபாரத்தை நடத்த முடியாமல் பரிதவிக்கிறோம். எங்களுக்கும் போதுமான அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள மனிதவள அமைச்சு உதவி புரிய வேண்டும் என்று மலேசிய இந்திய முஸ்லிம் மளிகை கடைகள் வியாபாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டது.

நேற்று மனிதவள அமைச்சில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் மலேசிய இந்தியர் முஸ்லிம் உணவக சங்கத்தின் தலைவர் டத்தோ ஜஹாவர் அலி, மலேசிய இந்திய முஸ்லிம் மளிகை கடைகள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் Abdul Alim Sidique Zakariah உட்பட சங்கத்தின் முக்கிய உறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here