வெளிநாட்டினரின் சட்டபூர்வ அந்தஸ்தை பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் சரிபார்க்கத் தேவையில்லை – குடிநுழைவு துறை

பெட்டாலிங் ஜெயா:

ங்களை அறியாமலே சட்டவிரோதக் குடியேறிகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று மலேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்து உள்ளது.

பயணிகள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சோதித்து அறியும் அதிகாரம் ஓட்டுநர்களுக்கு இல்லை என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ரஸ்லின் ஜுஸோ கூறியுள்ளார். அத்தோடு சட்டவிரோதக் குடியேறிகள் பயணம் செய்ய அனுமதிக்கும் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று போலியாக பரப்பப்பட்டு வரும் தகவலை அவர் மறுத்தார்.

வெளிநாட்டினரின் சட்டபூர்வ அந்தஸ்தை பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் சரிபார்க்கத் தேவை இல்லை என்று சனிக்கிழமை (டிசம்பர் 23) வெளியிட்ட தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குடிநுழைவுத் துறை குறிப்பிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here