கோலா திரெங்கானு:
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து, தெரெங்கானுவின் 6 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 13 ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன.
பெசூட்டில், ஜுன்ஜுங்கன் கெருக்கில் உள்ள சுங்கை பெசூட்டின் நீர்மட்டம் 35.08 மீட்டரை எட்டியுள்ளது, இது அதன் அபாய அளவை 35 மீட்டரைத் தாண்டியுள்ளது, அதே சமயம் கம்போங் லாவில் உள்ள சுங்கை பெசூட்டின் நீர் மடடம 22.16 மீட்டர் அளவில் பதிவாகியுள்ளது, இது அதன் ஆபத்து நிலை 21.8 மீட்டரை தாண்டியுள்ளது.
அதே நேரத்தில் செத்தியூவில், கம்போங் புக்கிட்டில் உள்ள சுங்கை நெருஸின் நீர்மட்டம் 13.78 மீட்டரில் பதிவாகியுள்ளது இது அதன் ஆபத்து நிலை 12.3 மீட்டரை தாண்டியுள்ளது, அதேநேரத்தில் ஜிகடன் பெர்மைசூரியில் உள்ள சுங்கை செத்தியூவின் நீர்மட்டம் 9.08 மீட்டரில் பதிவாகியுள்ளது இது அதன் ஆபத்து நிலை 8.8 மீட்டரை தாண்டியுள்ளது மற்றும் கோலா திரெங்கானுவில், சுங்கை திரெங்கானுவும் ஆபத்து நிலையை தாண்டியுள்ளது என்று publicinfobanjir.water.gov.my இணையதளம் தெரிவித்துள்ளது.