கோலாலம்பூர்:
`கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்’ (KLIA) இரண்டாவது முனையத்தில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரிடம் அதிக கட்டணம், வசூலித்ததாகக், கூறப்படும் ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை, நடந்து வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில் பரவிய இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் ஒருவர் அறுபது ரிங்கிட் கட்டணம் என்று கூறி பின்னர் RM800 ரிங்கிட் கேட்டதாக சம்பந்தப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார்.
எனவேதான், இணையத்தில் பரவிய இந்த பதிவின் அடிப்படையில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் (Anthony Loke Siew Fook), இந்த சம்பவத்தை விசாரிக்குமாறு சாலைப் போக்குவரத்துத் இலாகாவை அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து JPJ, KLIAவில் ஒரு ரகசிய நடவடிக்கை நடவடிக்கையை தொடங்கி, நேற்று இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநரை கைது செய்ததோடு வாகனத்தையும் பறிமுதல், செய்தது.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அதிரடியான நடவடிக்கையைப் பாராட்டிய, அமைச்சர் லோக் நாட்டின் நற்பெயருக்கு, களங்கம் விளைவிக்கும் ஓட்டுநர்களுக்கு தனது அமைச்சு எந்த சலுகையும் அளிக்காது என்று கடுமையாக எச்சரித்தார்.




















