சபாவில் முஸ்லிம் அல்லாத கல்வி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு

கோத்தா கினாபாலு:

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் முஸ்லிம் அல்லாத மத அமைப்புகள், மிஷன் பள்ளிகள் மற்றும் தனியார் மற்றும் உள்ளூர் பள்ளிகளின் வளர்ச்சிக்காக RM56.75 மில்லியனை சபா மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த தொகை இந்த ஆண்டு RM54.05 மில்லியனாக இருந்தது என்றும், இது அடுத்தாண்டுக்கு சற்று அதிகரித்துள்ளதாகவும் சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூர் கூறினார்.

இந்த ஒதுக்கீடு அவர்களின் செயல்பாட்டு செலவுகள் மற்றும் இதர தேவைகளுக்கு உதவும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

இன, மத பேதமின்றி அனைவரின் நலனையும் நியாயமாகவும், நீதியாகவும் பேணுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற கிறிஸ்மஸ் திறந்த இல்லத்தில் அவர் தெரிவித்தார்.

சபாவில் உள்ள மக்களின் ஒற்றுமைக்காக ஒவ்வொரு பண்டிகை மற்றும் கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை மாநில அரசு பாராட்டுவதாக ஹாஜிஜி கூறினார்.

“இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் மீது எவ்வாறு அக்கறை கொள்கின்றன என்பதையும், பல்லின மற்றும் பல இன சமூகத்தினரிடையே நாம் எவ்வாறு ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறோம் என்பதையும் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here