அரசியலில் விஜய்.. யோசிக்காமல் சிவராஜ்குமார் கூறிய அந்த வார்த்தை

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால்பதிக்கும் நோக்கில் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுவெளியில் செய்ய துவங்கியுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவது பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எனது 100-வது படம் தொடர்பான விழாவில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் வித்தியாசமான ஸ்டைல் இருக்கு. அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். 

அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர் இல்லை. அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கார். அவர் தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகளை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் உரையாடும் வீடியோவை பார்த்தேன். 

அவரை பற்றி நல்ல விதமாக உணர்கிறேன். அரசியலுக்கு வருவதற்கான திறன் அவரிடம் இருக்கு. அவர் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கை மக்களுக்கும் பிடித்துள்ளது. நடிகர் அரசியலுக்கு வந்தால், ஏன் வரவேண்டும் என்பார்கள். மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அவரிடம் அதற்கான ஆளுமை இருக்கிறது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here