சிலாங்கூரிலுள்ள 16 மசாஜ் நிலையங்களில் சட்டவிரோதமாக வேலைசெய்த 76 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர்:

சிலாங்கூரில் 16 மசாஜ் நிலையங்களில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையில், மொத்தம் 76 வெளிநாட்டுப் பெண்களையும் ஒரு ஆணையும் கைது செய்தனர்.

நேற்று (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு நடந்த சோதனையில், மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று நம்பப்படும் 37 வெளிநாட்டு பெண்களும் மீட்கப்பட்டனர் CID வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சோதனைகள் பெட்டாலிங் ஜெயா, செர்டாங் மற்றும் கோம்பாக் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு கிள்ளான் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது.

“1959/63 குடியேற்றச் சட்டம் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 25 வியட்நாமியப் பெண்கள், 28 தாய்லாந்து பெண்கள் மற்றும் 23 இந்தோனேசியப் பெண்கள் மற்றும் ஒரு இந்தோனேசிய ஆடவர் ஆகியோரை நாங்கள் தடுத்து வைத்துள்ளோம்.

அதே நேரம் மனிதக் கடத்தல் மோசடியில் சிக்கியிருந்த 19 இந்தோனேசிய பெண்கள், 15 வியட்நாம் பெண்கள் மற்றும் தாய்லாந்து, சீனா மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த தலா ஒரு பெண் ஆகியோரையும் நாங்கள் காப்பாற்றினோம் என்று அவ்வறிக்கையில் அது மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த வெளினாட்டினரை தருவுக்குமி முகவர்களாக செயற்பட்டதாக நம்பப்படும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 15 உள்ளூர்காரர்களை கைது செய்து, தடுத்துவைத்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here