பழுதடைந்த பெரோடுவா பெஸ்ஸாவை முழு விலையில் நிறுவனம் திரும்பி எடுத்து கொண்டது ; நாககன்னி மகிழ்ச்சி

பெரோடுவா பெஸ்ஸா காரை வாங்கிய எட்டு மணி நேரத்திற்குப் பிறகு பழுதடைந்ததாகக் கூறப்படுவது தொடர்பில்  கார் நிறுவனம் வாகனத்தை முழு விலையில் திரும்ப பெற்று கொண்டது என்று காரை வாங்கிய குமாஸ்தா எஸ் நாககன்னி தெரிவித்தார்.

பெரோடுவா தன்னிடம் இருந்து பெஸ்ஸாவை வாங்க “இறுதியாக ஒப்புக்கொண்டது” என்று கூறினார். அக்டோபரில் விற்பனை மையத்தில் இருந்து காரை வாங்கியுள்ளார். புகாரை விசாரித்து வருவதாக பெரோடுவா புதன்கிழமை கூறியது. நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஜேஎச் ரோஸ்மான் ஜாபர்  இந்த விஷயத்தைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுவதை மறுத்தார். நாககன்னிக்கு மரியாதை நிமித்தமாக கார் வழங்கவும், பழுதடைந்த வாகனத்தை திரும்ப வாங்கவும் பெரோடுவா முன்வந்ததாக அவர் கூறினார்.

பெஸ்ஸா பழுதடைந்த பிறகு தொடர்ந்து செலுத்திய மாதாந்திர கடனைத் திருப்பிச் செலுத்துவதாக பெரோடுவா தன்னிடம் கூறியதாக நாககன்னி கூறினார். பெரோடுவா அதே மாதாந்திர கடன் திருப்பிச் செலுத்தும் விகிதத்தில் எனக்கு மற்றொரு காரை விற்க முன் வந்தது என்று அவர் முகநூல் இடுகையில் கூறினார். இந்த சலுகையை முடிவு செய்ய ஒரு வார காலம் உள்ளது.

முன்னதாக, ஒரு சர்வீஸ் சென்டரில் கார் சிக்கியிருந்தாலும், மாதாந்திர கடன் தவணை RM537 செலுத்த வேண்டும் என்று கூறி, பெரோடுவா தனது புகாரை நடத்தும் விதம் குறித்து நாககன்னி அதிருப்தி தெரிவித்தார்.

அக்டோபர் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு செகாமட் வாகன விற்பனை மையத்தில் இருந்து கார் வாங்கப்பட்டது. அதே நாளில் இரவு 7.40 மணியளவில் அதன் இன்ஜினை இயக்க முடியாத சிக்கல்களை எதிர்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here