பெட்டாலிங் ஜெயா:
கடந்த செவ்வாயன்று தொடங்கப்பட்ட நாட்டின் முதன்மை தரவுத்தள அமைப்பில் (PADU) இந்த வார இறுதிக்குள் ஒரு மில்லியன் பதிவுகளை எட்டுவதற்கான சாத்தியம் வலுவாக உள்ளது.
நேற்று நண்பகல் நிலவரப்படி, 612,807 பதிவுகளைப் பெற்றுள்ளது, இதில் சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளைக் கொண்ட மாநிலமாக உள்ளது என்று புள்ளியியல் துறையின் தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ முகமட் உசிர் மஹிடின் கூறினார்.
“இது ஒரு நாளைக்கு 200,000 பதிவுகள் என்ற எங்களின் இலக்கை தாண்டியுள்ளது என்றும், இதில் இதுவரை 359,746 ஆண்களும் 253,061 பெண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்கள் வாரியாக சிலாங்கூரில் மிக அதிகமாக 148,547 மொத்த பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து முறையே ஜோகூரில் 66,036 பதிவுகளும் , பேராகில் 55,865 பதிவுகளும், கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் 44,359 பதிவுகள் மற்றும் சபாவில் 41,482 பதிவுகளும் பதிவாகியுள்ளன.
“குறைந்த மக்கள்தொகை காரணமாக, பெர்லிஸ் மாநிலம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பதிவுகளை பதிவு செய்துள்ளது” என்றும் முகமட் உசிர் கூறினார்.









