டீசல் கடத்தல் கும்பல் முறியடிப்பு ;27 பேர் கைது

கோலாலம்பூர்:

பெட்ரோனாஸ் மூலம் இயக்கப்படும் கப்பல்களுக்கு விநியோகம் செய்த டீசல் எரிப்பொருளை மோசடி செய்த கும்பலின் செயற்பாட்டை தேசிய போலீஸ்படை முறியடித்ததுடன், மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 27 பேரையும் கைது செய்துள்ளது. .

இந்த மோசடி மூலம் 2021ஆம் ஆண்டு முதல் 12 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று, புக்கிட் அமானின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK) இயக்குநர், டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறினார்.

“இந்த கும்பலின் செயல்பாடானது, கப்பலில் காணப்படும் எரிபொருள் கண்காணிப்பு அமைப்பு (VFMS) பதிவுகள் மூலம் கண்டறியப்பட்ட கப்பல்களில் இருந்து டீசலை மாற்றுவதும் விற்பதும் ஆகும்.

பெட்ரோனாஸின் உள்ளக புலனாய்வுத் துறையின் கண்காணிப்பின் முடிவுகளைத் தொடர்ந்து, இது தொடர்பில் JSJK ஆல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here