40 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களின் EPF உறுப்பினர் கணக்கில் ஊக்கத் தொகையாக RM500 வைப்பிலிடப்பட்டது

கோலாலம்பூர்:

ழியர் சேம நிதி வாரியம் (KWSP) 40 முதல் 55 வயதுக்குட்பட்ட அதன் 1.4 மில்லியன் உறுப்பினர்களுக்கு தலா RM500யை ஊக்கத்தொகையாக வைப்பிலிட்டுள்ளது. இதற்காக சுமார் RM708 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கியதாக அது இன்று அறிவித்துள்ளது.

24 பிப்ரவரி 2023 நிலவரப்படி, அந்தந்த உறுப்பினர் கணக்கு 1 இல் RM10,000 மற்றும் அதற்கும் குறைவான EPF சேமிப்புகளை வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிக்கையில் EPF கூறியுள்ளது.

“இந்த RM500 ஊக்கத்தொகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் செய்யப்படும் என்று 24 பிப்ரவரி 2023 அன்று பட்ஜெட் 2023 சமர்ப்பிப்பின் போது அறிவிக்கப்பட்டது, இறகு குறிப்பாக குறைந்த சேமிப்பு மற்றும் ஓய்வு பெறும் வயதை நெருங்கி வரும் EPF உறுப்பினர்களுக்கு தொடர்ந்து சேமிப்பதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here