கோலாலம்பூர்:
உலகின் இரண்டாவது மிக உயரமான கோபுரமான மெனாரா மெர்டேக்கா 118, மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை இரவு நடந்த இந்த நிகழ்வில் பேரரசியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் கலந்துகொண்டார்.
மெனாரா மெர்டேக்கா 118 ஆனது PNB க்கு சொந்தமானது, இது 118 தளங்களுடன் 678.9 மீ உயரத்தில் நிற்கும் அதிநவீன கோபுரம், உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் உயரம் கொண்ட துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவுக்கு அடுத்தபடியாக மெனாரா மெர்டேக்கா 118 உள்ளது.










