சிலாங்கூர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் புதிய தலைமைத்துவம் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தேசிய உயரம் தாண்டுதல் முன்னாள் விளையாட்டாளர் லீ ஹுப் வெய் நம்பிக்கை தெரிவித்தார்.
கடைநிலை மேம்பாட்டுத் திட்டங்களை மீண்டும் வலுப்படுத்துவதற்கு நூர் ஹயாத்தி கரிம் தலைமையிலான சிலாங்கூர் ஓட்டப்பந்தயச் சங்கத்தால் போதிய வசதிகளை ஏற்பாடு .செய்து தர முடியும்.
அதோடு அந்த அமைப்பு இவ்விவகாரத்தில் முழு கவனத்தையும் செலுத்தும். இந்தத் தவணை சங்கத் தலைவர் தனது கடமையைச் சிறப்பாகச் .செய்துள்ளார். மேலும் அவர் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருந்தன.
அதன் பலன்களும் சிறப்பாக அமைந்தன. சிலாங்கூர் ஓட்டப்பந்தயச் சங்கம் மீண்டும் தோற்றுவிக்கப்பட்ட பிறகுதான் வெளிநாடுகளில் போட்டியிடக்கூடிய விளையாட்டாளர்களை அடையாளம் காண முடிகின்றது எனவும் அவர் கூறினார்.
முன்னதாக சம்பந்தப்பட்ட சங்கத்தின் பதிவு 2 ஆண்டுகளுக்கு ரத்து. செய்யப்பட்ட பின்னர் நூர் ஹயாத்தி அதன் தலைவர் பொறுப்பை ஏற்றார். மேலும் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் 2024 – 2026 தவணைக்கான தலைவராக நூர் ஹயாத்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.









