வாடகைக் காரில் போதைப்பொருள் விநியோகம்; பெண் கைது

உலு சிலாங்கூர்:

போதைப்பொருள் விற்பனையாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண், 16.20 கிராம் ஹெரோயினுடன் நேற்று கலும்பாங்கின் தாமான் தெம்புவா பிஸ்தாரியின் சாலையோரத்தில் வாடகைக் காரில் ஏறியபோது கைது செய்யப்பட்டார்.

உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) மற்றும் கெர்லிங் காவல் நிலையத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (BSJN) போலீஸ் குழுவால் மாலை 5 மணியளவில் நிரந்தர வேலையில்லாத 36 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மூன்று மாதங்களாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் மற்றும் சிம்பாங் எம்பாட், தஞ்சோங் மாலிம், பேராக் மற்றும் உலு பெர்னாம் ஆகிய பகுதிகளை போதைப்பொருள் விநியோக இடங்களாக பயன்படுத்தி வந்துள்ளதாக, உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஹ்மட் ஃபைசல் தஹ்ரிம் கூறினார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஹெரோயின் என நம்பப்படும் 7 வெளித்தெரியும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 300 ரிங்கிட் என்றும், அதை மீண்டும் பேக்கிங் செய்தால் 100 போதைப்பித்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்,” என்று அவர் சொன்னார்.

உலு பெர்னாமில் உள்ள உள்ளூர் போதைப்பித்தர்களுக்கு இந்த போதைப்பொருள் விற்கப்படுவதாக நம்பப்படுகிறது என்று கூறிய அஹ்மட் பைசல், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் நேற்று தொடங்கி ஜனவரி 28 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here