JPJ அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த லோரி ஓட்டுநருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சிரம்பான்: 

சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு 500 ரிங்கிட் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் லோரி ஓட்டுநருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழக்கு விசாரணை அதிகாரி ஜைனப் யாஹ்யாவின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூருல் சகினா ரோஸ்லி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 நேற்று (ஜனவரி 24) போர்ட் டிக்சனில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யச் சென்றபோது, 20 வயது சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டார்.

அதே நாளில் லூகூட்டில் காலை 10.40 மணியளவில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் சரக்கு ஓட்டுநர் உரிமம் (ஜிடிஎல்) இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக நிறுத்தப்பட்ட பின்னர் அவர் லஞ்சம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

மேலும் லாரிக்கு செல்லுபடியாகும் சாலை வரி, காப்பீட்டுத் தொகை இல்லாததால், கணினி மயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையத்திற்கு (புஸ்பகம்) அவ்வப்போது ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை.

சட்ட உதவிப் பணியகத்தைச் சேர்ந்த ஃபாத்ரிமஹ்வதி மெஹமட் ஒஸ்மான் என்பவர் சந்தேக நபரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 17(பி)ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here