கேமரன் ஹைலேண்ட்ஸ்:
கம்போங் ராஜா,, பத்து 59 இல் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட இரண்டாவது ஆடவரின் சடலம் இன்று மதியம் 12.05 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்குள்ள காய்கறி தோட்டப்பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கான குடியேற்ற வீடு (ரூமா கோங்சி) இருந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் இரண்டாவது சடலம் கண்டெடுக்கப்பட்டது என்று, மாவட்ட காவல்துறைத் தலைவர் துணைக் கண்காணிப்பாளர் அஸ்ரி ரம்லி கூறினார்.
“ஆரம்பகட்ட ஆய்வின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், “ஆனால் இப்போது நான்கு சக்கர வாகனத்தில் கூட அப்பகுதிக்கு செல்ல முடியாது வர முடியாது என்றும், ஏனெனில் சம்பவ இடத்திற்குச் செல்லும் வழியில் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன,” என்றும் அவர் கூறினார்.
அதிகாலை 2.51 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நான்கு பேர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் அனைவரும் 25 முதல் 56 வயதுக்குட்பட்ட மியான்மர் நாட்டவர்கள் என கேமரன் ஹைலேண்ட்ஸ் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு உறுதி செய்துள்ளது.
மேலும் இன்று அதிகாலை 3 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நபர் ஹாபி (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கேமரன்மலை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
























