திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 782 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோல திரெங்கானு:

திரெங்கானுவில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது, 228 குடும்பங்களைச் சேர்ந்த 782 பேர் இன்னும் டுங்கூனில் உள்ள ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நேற்றிரவு, மொத்தம் 923 பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்த ஏழு நிவாரண மையங்களில் இருந்த நிலையில், இன்று காலை அந்த எண்ணிக்க்கை குறைவடைந்துள்ளது.

திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செயலகத்தின் அறிக்கையின் அடிப்படையில், கம்போங் ஷுகோர் பல்நோக்கு மண்டபத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 226 பேர் மற்றும் கம்போங் பாசீர் ராஜா மக்கள் மன்றத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கம்போங் ஜொங்கோக் பத்துவில் உள்ள ஜமேக் மசூதியில் உள்ள நிவாரண மையத்தில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 126 பாதிக்கப்பட்டவர்களும், படாங் புளூட் தேசிய உயர்நிலைப் பள்ளியில் 6 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 34 பேரும் உள்ளனர், அதே நேரத்தில் கம்போங் செர்டாங் மசூதி மண்டபத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேரும் தங்கியுள்ளனர்.

தற்போது மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here