சபா, சரவாக் பகுதிகளில் பிப்ரவரி 4 வரை தொடர் மழைக்கு வாய்ப்பு

கோலாலம்பூர்:

ரவாக் மற்றும் சபாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலையால் சரவாக்கில் மிரி மற்றும் லிம்பாங் பாதிக்கப்படும் பகுதிகள், அதேநேரம் சபாவில், தெலுபிட், கினாபடங்கான், பெலூரான், கூடாட் மற்றும் சண்டக்கானை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என்று மெட்மலேசியா, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பகாங், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பகாங்கில், பெக்கான் மற்றும் ரொம்பின், ஜோகூரில் உள்ள சிகாமாட் ஆகிய பகுதிகள்; சமரஹான் (சிமுஞ்சான்), ஸ்ரீ அமான் , பேடோங், சரிகேய், சிபு, மூக்கா (தஞ்சுங் மானிஸ், டாரோ மற்றும் மாது) மற்றும் சரவாக்கில் கபிட் ஆகிய இடங்களிலும் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதாவது ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லக்கூடிய குறுகிய கால எச்சரிக்கை என்று அது மேலும் தெளிவுபடுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here