‘மினி டாக்காவில்’ மீண்டும் சோதனை; 490 பேர் கைது

கிள்ளான்:

மினி டாக்கா என உள்ளூர்க்காரர்களால் அழைக்கப்படும் ஜாலான் அமான் பெர்டானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக சோதனையில் சட்டவிரோத குடியேறிகள் 490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புக்கிட் அமான் இரகசிய, சூதாட்டம் மற்றும் குற்றப்பிரிவு (D7) பொது நடவடிக்கைக் குழு (PGA) மற்றும் மலேசிய குடிநுழைவுத் துறையின் (JIM) சிலாங்கூர் மாநில கிளை ஆகியவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடந்த இந்த சோதனையில், தொழிற்சாலைகளால் சூழப்பட்ட ஐந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிநாட்டினர் வசிப்பது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தம் நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அவர்கள் சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வந்தனர் மற்றும் அவர்களின் சொந்த நாட்டிலிருந்து பொருட்களை தருவித்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

மொத்தம் 300 உறுப்பினர்கள் மற்றும் முழு ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரிகள் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைத்து, சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்டவர்களில் வங்களாதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அதிக காலம் தங்கியதற்காகவும், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது மற்றும் பிற குடியேற்றக் குற்றங்களுக்காகவும்கைது செய்யப்பட்ட்னர்.

20 மற்றும் 50 வயதிற்குட்பட்ட அனைத்து கைதிகளும் ஆவணப்படுத்தல் செயல்முறை முடிந்ததும் செமினியில் உள்ள குடிநுழைவு கிடங்கிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here