மோசடி முதலீட்டு திட்டம் ; தனித்து வாழும் தாய் மற்றும் பதின்ம வயது மகள் உட்பட 9 பேர் கைது

ஜோகூர் பாரு:

ல மாதங்களுக்கு முன்பு, நல்ல வருமானத்தை அளிக்கும் முதலீட்டுத் திட்டம் எனக்கூறி 200 க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியதாக தனித்து வாழும் தாய் மற்றும் அவரது பதின்ம வயது மகள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு தழுவிய அளவில் நடந்த இந்த முதலீட்டு மோசடியில், சுமார் RM2 மில்லியனை இழக்க நேரிடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை, அதிலும் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இல்லத்தரசிகள் என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெலபாங்கில் ஒரு வீட்டைச் சோதனை செய்தபோது, குறித்த மோசடியுடன் தொடர்புடைய ஒன்பது பேரைக் கைது செய்ததாக கூறப்படுகிறது. இதில் 40 வயதுடைய தனித்து வாழும் தாயும் அவரது 17 வயது மகளும் அடங்குவர் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் இந்தக் கும்பல்ட், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைக் கவர்ந்திழுப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

“RM150 போன்ற சிறிய முதலீடு செய்வதன் மூலம், 100 நாட்களுக்கு மேல் ஒரு நபர் RM1,000க்கு மேல் பெற முடியும் என்று மக்களுக்குச் சொல்வதே அவர்களின் செயல்பாடாகும்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் RM150 முதல் RM40,000 வரை இழந்துள்ளனர், இதுதொடர்பில் ஜோகூரில் இதுவரை பல போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதை உறுதி செய்ததுடன் , அவர்கள் மீது இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்றார்.

மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here