பினாங்கு பாலத்தில் ஆபத்தான முறையில் சவாரி செய்த தம்பதி கைது

புக்கிட் மெர்தாஜாம்:

டந்த திங்கட்கிழமை (பிப். 5) பினாங்கு பாலத்தில் ஆபத்தான முறையில் சவாரி செய்து, சாலையில் பயணித்த மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை காலால் உதைக்க முயற்சித்தது போன்று வெளியான வீடியோ தொடர்பில், ஒரு தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த தம்பதி நேற்று (பிப்ரவரி 6) ஜார்ஜ் டவுனில் கைது செய்யப்பட்டதாக மத்திய செபராங் பிறை மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் “வைரலான வீடியோவில் இருந்த சந்தேக நபர்கள் இவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று, நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் இன்று புதன் கிழமை (பிப்ரவரி 7) நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று ஏசிபி ஹெல்மி தெரிவித்தார்.

“2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் குறித்த தம்பதியினருக்கு மூன்று கிரிமினல் வழக்குகள் இருப்பதாக சோதனைகள் காட்டுகின்றன, ஆனால் அவர்கள் தேடப்படும் பட்டியலில் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 506 மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 42 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here