பட்டர்வொர்த்:
நேற்று (பிப் 9) சுங்கை துவா டோல் பிளாசாவில் சீனப்பெருநாள் பண்டிகைக் காலத்துடன் இணைந்து
பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட “Ops Khas Motosikal” எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 143 சம்மன்கள் வழங்கியது.
மாநில போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) மற்றும் மாநில சுற்றுச்சூழல் துறை (DOE) இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், மூன்று மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“போலி வாகனப் பதிவு எண்ணைக் காண்பித்தல், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் சவாரி செய்தல், காலாவதியான மோட்டார் வாகன உரிமம் (LKM) மற்றும் காப்பீட்டுத் தொகை இல்லாதது, பொருந்தாத பதிவு எண்ணைக் காண்பித்தல், மற்றும் அனுமதியின்றி மோட்டார் சைக்கிள்களின் விவரக்குறிப்புகள், வடிவத்தை மாற்றியமைத்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 143 சம்மன் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை மாலை 3 மணிக்குத் தொடங்கி நான்கு மணி நேரம் தொடர்ந்ததாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் JPJ கூறியது.