ஜோகூர் பாரு:
2024-2027 காலத்திற்கான மாநில நிர்வாகக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட சிறிய மறுசீரமைப்பை இன்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி அறிவித்தார்.
புதிய ஆட்சிக்குழுவில் தஞ்சோங் சூராட் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னான் தமின் மாநில நிர்வாகத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் ஆட்சியாளர் துங்கு மஹ்கோடா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், இந்த புதிய நியமனம் மற்றும் மாநில நிர்வாகக் குழு மறுசீரமைப்புக்கு ஒப்புதல் அளித்ததுடன், இன்று நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் என்று ஒன் ஹபீஸ் கூறினார்.