ஷரியா சட்டத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்த குழு அமைக்க பெரிக்காத்தான் ஆலோசனை

­பெரிக்காத்தான் நேஷனல், “ஷரியா சட்டத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும்” ஆய்வு மற்றும் வழிகளை முன்மொழிவதற்கு ஒரு சிறப்புக் குழுவை அமைக்கும்.

கிளந்தான் சிரியா குற்றவியல் கோட் (I) சட்டம் 2019 இல் உள்ள 16 விதிகளை நிராகரிப்பதற்கான கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மேற்கோள் காட்டி, PN தலைவர் முஹிடின் யாசின், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வட்டமேசையையும் கூட்டமைப்பு ஏற்பாடு செய்யும் என்றார்.

வட்டமேசைக்கு பாஸ் துணைத் தலைவர் இட்ரிஸ் அஹ்மத் தலைமை தாங்குவார் என்றும், குழுவுக்கு பாஸ் செயலாளர்  தக்கியுதீன் ஹாசன் தலைமை தாங்குவார்கள் என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பு மற்றும் இஸ்லாமிய சட்ட வல்லுநர்கள், அறிஞர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்துரையாடலுக்காக இணைக்கப்படுவார்கள்.

மலேசியாவில் ஷரியா சட்டத்தின் நிலை மற்றும் நோக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை PN தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

நேற்றிரவு கூடிய பெரிக்காத்தான் சுப்ரீம் கவுன்சிலில் வட்டமேசை மற்றும் குழு குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக முஹிடின் கூறினார். வெள்ளிக்கிழமையன்று, கூட்டரசு நீதிமன்றம் 16 ஷரியா சட்ட விதிகளை அவை அரசியலமைப்பிற்கு முரணானது என்ற அடிப்படையில் ரத்து செய்தது.

8-1 பெரும்பான்மை முடிவை வழங்குவதில், தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், கேள்விக்குரிய குற்றங்கள் கூட்டாட்சி சட்டத்தின் கீழ் உள்ளதால், சட்டத்தின் ஒரு பகுதியாக விதிகளை நிறைவேற்ற மாநில சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றார். நீதிமன்றத்தின் தீர்ப்பை மலேசியாவில் “இஸ்லாமியர்களுக்கு வரலாற்றில் இருண்ட நாள்” என்று தக்கியுதீன் விவரித்தார். மேலும் இந்தத் தீர்ப்பு மற்ற மாநிலங்களில் ஷரியா சட்டங்களை அச்சுறுத்தும் என்று கூறினார்.

இன்று முன்னதாக, சிலாங்கூரின் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பையும், கூட்டாட்சி அரசியலமைப்பையும் மதிக்குமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய கவுன்சிலின் தலைவரான சுல்தான் ஷராபுதீன், சில தரப்பினர் சில கட்சிகளின் நலன்களுக்காக சர்ச்சையில் விளையாட முயல்கின்றனர். இது நாட்டில் உள்ள முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அவர் தக்கியுதீனின் “இருண்ட நாள்” கருத்தையும் குறிப்பிட்டார். ஆனால் அந்த விவாதத்தில் சேர விரும்பவில்லை என்றார். இதற்கிடையில், நெகிரி செம்பிலான் பெரிக்காத்தான் தலைவராக லாபு சட்டமன்ற உறுப்பினர் ஹனிஃபா அபு பேக்கர் நியமிக்கப்பட்டதாக முஹிடின் அறிவித்தார்.

கடந்த மாதம் நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவராக நியமிக்கப்பட்ட ஹனிஃபா, பெர்சத்து துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமுவிடம் இருந்து பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here