பிகேஆரின் மூன்று மாநிலத் தலைவர்களை மூடிய கதவு கூட்டத்தில் சந்தித்த அன்வார்

பட்டர்வொர்த்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வியாழன் இரவு (பிப். 15) செபெராங் ஜெயாவில் உள்ள தி லைட் ஹோட்டலில் பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய பிகேஆர் மாநிலத் தலைமைக்குழுக்களுடன் (MPN) ஒரு  மூடிய கதவு கூட்டத்தில் கலந்து கொண்டார். பிகேஆர் தலைவரான அன்வார், பிகேஆரின் தகவல் தொடர்பு தலைவரும், அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் பிகேஆர் மகளிர் தலைவியும் கல்வி அமைச்சருமான ஃபட்லினா சிடேக் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அன்வார் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கூட்டங்களை நடத்தினார். ஆனால் அமர்வுகள் தொடர்பான விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இன்று பினாங்குக்கு  பயணமாக இருக்கும் பிரதமர், யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவில் (யுஎஸ்எம்) நடைபெறும் பினாங்கு ஜகாத் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன், காலையில் பண்டார் பெர்டானாவில் உள்ள மடானி மலிவு விற்பனை உள்ளிட்ட பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

பின்னர் அவர் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றவும், பெர்மாத்தாங் பாவில் உள்ள மஸ்ஜித் ஜமேக் தெங்கா பெராபிட்டில்  மதிய விருந்தில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பத்து கவான் தொழில் பூங்கா 3 (BKIP 3) இன் அடிக்கல் நாட்டு விழாவுடன் தனது பயணத்தை முடிப்பதற்கு முன், செபெராங் பிறை பாலிடெக்னிக்கின் டேவான் ஶ்ரீ முத்தியாராவில் பினாங்கு தொழில்முனைவோர் இணைப்பு மற்றும் மேம்பாட்டு கார்னிவலை அவர் திறந்து வைப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here