மத விவகார அமைச்சர் நியமனம் கல்வித் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்

கோலாலம்பூர்:

மத விவகார அமைச்சர் நியமனம் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா ஆணையிட்டுள்ளார்.

இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான மலேசிய தேசிய கவுன்சில் (MKI ) தலைவராகவும் பணியாற்றும் சுல்தான், “இஸ்லாமிய கல்விப் பட்டங்களின் அடிப்படையிலான கல்வித் தகுதிகள் ஒரு மத விவகார அமைச்சரை நியமிப்பதில் முக்கிய அளவுகோலாக இருக்க வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்கிறேன் என்று, சிலாங்கூர் ராயல் ஆபிஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

“இஸ்லாமிய மத விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் அரசியலாக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாராத உறுப்பினர்களிடமிருந்து மத விவகார அமைச்சரை நியமிக்கும் நடைமுறையைத் தொடர முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறிய மாட்சிமை தங்கிய சுல்தான் ஷராபுதீன், அதே இடுகையில், அனைத்து தரப்பினரும் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், கூட்டரசு அரசியலமைப்பின் நிலைப்பாட்டையும் நாட்டின் உச்ச சட்டமாக மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறிப்பாக கிளந்தான் சிரியா குற்றவியல் விதி (1) சட்டம் 2019 இன் கீழ் 16 விதிகளை ரத்து செய்த கூட்டரசு நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் சுல்தான் ஷராபுதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here