கடந்தாண்டு RM2.2 பில்லியன் வரி வசூலித்தது HRD Corp

கோலாலம்பூர்:

கடந்தாண்டு HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டுக் நிறுவனம் மொத்தம் RM2.2 பில்லியன் வரிப்பணமாக வசூலித்துள்ளது.

1993 ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நிறுவப்பட்ட காலத்திலிருந்து வரலாற்றிலேயே கடந்த ஆண்டே மிக அதிகமாக வரி வசூல் செய்யப்பட்டது என்று மனித வளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

இது முந்தைய ஆண்டு RM1.81 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

HRD Corp ஆனது வரி வசூலித்தது தவிர, கடந்த ஆண்டு RM1.78 பில்லியன் மதிப்புள்ள நிதி உதவிகளை அங்கீகரிப்பதிலும், RM2.2 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த செயல்திறனை அடைந்துள்ளது என்று, 2024 ஆம் ஆண்டுக்கான HRD corp சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவர் தனது உரையின் போது கூறினார்.

உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து மலேசியர்களுக்கும் தரமான பயிற்சி திட்டங்களை வழங்க மனித வள அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக சிம் மேலும் கூறினார்.

தொழிலாளர்களிடையே நலன், திறன்கள் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக, எங்களின் 3K ஃபோகஸ் உடன் இது ஒத்துப்போகிறது,” என்று அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தனிநபர்கள், பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்பை யாரும் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பயிற்சித் திட்டங்களை உருவாக்குமாறு HRD Corpஐக் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here