அதிரடி.. பாகிஸ்தானில் நுழைந்து சண்டையிட்ட ஈரான் ராணுவம்! பயங்கரவாத அமைப்பின் தளபதி பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்-ஈரான் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று பாகிஸ்தானுக்குள் அதிரடியாக ஈரான் ராணுவம் நுழைந்து ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத அமைப்புடன் ஆயுத சண்டை செய்தது. இதில் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார். இந்நிலையில் தான் மோதல் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.  பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தானுக்கு நல்உறவு என்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அந்த நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பது தான்.

அதாவது பிற நாடுகளில் சதித்திட்டங்களை தீட்டி தாக்குதல் நடத்திவிட்டு பாகிஸ்தான் செல்வோருக்கு அடைக்கலம் கொடுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும் பாகிஸ்தான் மட்டும் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபகாலமாக பாகிஸ்தான் – ஈரான் இடையேயான மோதல் உறவு என்பது மோசமடைந்து வருகிறது. கடந்த மாதம் ஈரான் பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் பகுதியில் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதாவது பாகிஸ்தானில் ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஈரான் ராணுவத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் அந்த அமைப்பின் முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இது பாகிஸ்தான்- ஈரான் இடையேயான உறவை ரொம்பவே பாதித்தது. அதன்பிறகு இரு நாடுகளும் அமைதி காத்தன. இத்தகைய சூழலில் தான் இன்று பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. அதாவது இன்று ஈரான் ராணுவம் அதிரடியாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் சண்டை செய்தது. இருதரப்புக்கும் இடையே பயங்கர ஆயுத சண்டை நடந்தது.  இதில் ஈரான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத குழுவின் மூத்த தளபதி இஸ்மாயில் ஷாபக்ஸ் பலியானதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் பாகிஸ்தான்-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பொதுவாக ஒரு நாட்டு எல்லைக்குள் இன்னொரு நாட்டு ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் நுழைவது அபூர்வமானது. ஆனால் ஈரான் இன்று பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்புடன் சண்டையிட்டுள்ளது.

இதனால் இருநாடுகள் இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டைக்கு முக்கிய காரணமாக உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் எனும் அமைப்பு கடந்த 2012ம் ஆண்டு உருவானது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அமைப்பு ஈரானுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மேலும் தாக்குதலை நடத்தி வருகிறது. அதாவது சிரியாவில் ஈரான் தலையீடு இருக்கும் நிலையில் அதில் இருந்து பின்வாங்க வேண்டும் என தொடர்ந்து ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பு கூறுகிறது. மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி தொடர்ந்து ஈரான் படை மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து தான் இந்த அமைப்பை ஈரான் பயங்கரவாத குழுவாக அமைக்கப்பட்டுள்ளது. சன்னி பயங்கரவாதி குழு என ஈரான் கூறி வருகிறார்.

இந்த பயங்கரவாத அமைப்பு சிஸ்டான்-பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பம் மாதம் இந்த பயங்கரவாத அமைப்பு சிஸ்டான்-பலுசிஸ்தான் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 11 போலீஸ்காரர்கள் பலியாகின. இதையடுத்து தான் ஈரான் ராணுவம் ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் முகாம்கள் மீது கடந்த மாதம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து இப்போது பாகிஸ்தானில் நுழைந்து அதிரடியாக சண்டையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here