இன்று தொடங்கும் மாமன்னரின் அரச உரை மீதான விவாதத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக தயாராகி பங்கேற்பார்கள் என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நம்புகிறார்.
15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் முதல் கூட்டத்தை நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆரம்பித்து வைத்த அரச உரையின் பின்னர் ரமணன் இதனை தெரிவித்தார். இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு உதவுவதற்கும் தேசத்தை மேம்படுத்துவதற்கும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது தங்கள் உள்ளீடுகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு விவாத அமர்வை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அரச உரையில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாட்சிமை பொருந்திய மாமன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவையின் நடைமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் சுமுகமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்.
முன்னதாக, 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் முதல் கூட்டத்தின் தொடக்க விழாவின் போது சுல்தான் இப்ராகிம் பல்வேறு தலைப்புகளில் நினைவூட்டல்கள், ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை வழங்கினார். அவற்றில் செனட் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பண்பு மற்றும் நடத்தை, நாட்டின் கடன் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்து மாமன்னர் உரையாற்றினார்.