இரவு சந்தையில் மாட்டிறைச்சி விற்பனை செய்த வங்காளதேசி கைது

நீலாய்:

இங்குள்ள தாமான் செமாராக் அருகேயுள்ள ஒரு இரவு சந்தையில் மாட்டிறைச்சி விற்பனை செய்த வங்கதேசத்தை சேர்ந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று மாலை 5 மணி முதல் சிரம்பான் நகராண்மைக் கழகம் (MBS) நடத்திய ஆய்வின் போது, ​விற்பனை அனுமதியின் நிபந்தனைகளை மீறியதாகக் கைது செய்யப்பட்ட 13 வெளிநாட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

இந்த நடவடிக்கை குடிநுழைவுத் துறையின் நெகிரி செம்பிலான் மாநில பிரிவு மற்றும் சமூக நலத் துறை ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக MBS சட்ட மற்றும் அமலாக்க இயக்குநர் ஹனிசாம் அகமட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here