பெண்களுக்கான தலைமைத்துவத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்: டத்தின்ஶ்ரீ உமையாள் ஈஸ்வரன்

பெண் பிள்ளைகளுக்கும் கல்வி முக்கியம் என்பதை உணர்த்துவதே எங்களின் நோக்கம் என்று  மகாராணி  லேர்னிங் லேப் நிறுவனர் டத்தின்ஶ்ரீ உமையாள் ஈஸ்வரன் தெரிவித்தார். தங்களின் திறமைகள் குறித்து பலர் இன்னும் அறியாமல் இருக்கின்றனர். குறிப்பாக ஆங்கிலத்தில் புலமை பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்பதனை நாங்கள் அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறோம்.

சுதந்திரமாக இருக்கும் பெண்களால் எளிதாக சாதிக்க முடியும். ஏனெனில் அவர்களிடம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கு. பெண்களுக்கான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் தலையாய நோக்கம். கல்வியினால் மட்டுமே நம்மால் உயர முடியும் என்பதனை சிறு வயதில் இருந்தே நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சமூகம் நமக்கு வழங்கியிருப்பதை நாம் அடுத்தவர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். மாணவர்களுக்கு பயிற்சியை வழங்குவதை தாண்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகொணர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். திறமையான பல பெண் மாணவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால அவர்களின் திறமை வெளிக்கொணர முடியாமல் இருக்கின்றனர்.

நாங்கள் மகாராணி  லேர்னிங் லேப்பை கடந்த 13 ஆண்டுகளாக வழி நடத்தி வருகிறோம். இது வரை 8,000க்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகளின் (மாணவர்கள்) வாழ்வினை ஒளிமயமாக்கி இருக்கிறோம் என்றார் அவர். குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் (பி 40) மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் வறுமையுடன் கல்வி கற்காத பல பெண் மாணவர்கள் துன்புறுத்தல், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றிக்கு ஆளாகின்றனர்.

மகாராணி  லேர்னிங் லேப்பின் எதிர்கால திட்டம் குறித்து டத்தின்ஶ்ரீ உமையாள் ஈஸ்வரனிடம் கேட்டபோது எங்களின் திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் புறப்பாட நடவடிக்கையாக அங்கீகரிக்க வேண்டும் என்றார். பெண் பிள்ளைகளை பாராட்டுவோம்.  அவர்களின் தலைமைத்துவத்தை போற்றுவோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here